கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...




Join the forum, it's quick and easy

கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


கவிக்குயில்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


வேரறுக்க வேண்டும்

Go down

வேரறுக்க வேண்டும் Empty வேரறுக்க வேண்டும்

Post by brightson Tue Jan 17, 2012 9:43 pm

உலக அமைதியையும், உறுதிப்பாட்டையும், வளர்ச்சியையும் பயங்கரவாதம்
அச்சுறுத்தி வருகிறது. பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பலியாகியுள்ளது.
எனவே, உறுதியான நடவடிக்கைகள் மூலம் அதை வேரறுக்க வேண்டும்,” என்று ஜனாதிபதி
பிரதிபா பாட்டீல் கூறினார்.சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள்
பயிற்சி மையத்தில், ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
தற்போது, முதல் முறையாக ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் ஒன்பது மாதம்
பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற 151 பேரில் 111 பேர் ஆண்கள், 40
பேர் பெண்கள். தமிழகத்தில் இருந்து 25 பேர் பயிற்சி பெற்றனர். இவர்களின்
பயிற்சி நிறைவு அணிவகுப்பு, நேற்று பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி
மையத்தில் உள்ள, “பரமேஸ்வரன்’ திடலில் நடந்தது.
அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஏற்றுக் கொண்ட பின்
பேசியதாவது: சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம்,
கடந்த 46 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு உணர்வோடு நாட்டிற்கு சேவை செய்து
வருகிறது. ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற பெண்களின் கனவுகளை
இந்த மையம் தான் நனவாக்கியுள்ளது. இங்கிருந்து, இதுவரை 20,000 ஆண், பெண்
அதிகாரிகள் ராணுவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் பலர், பல்வேறு
வீர சாகசங்களைப் புரிந்து, விருதுகளைப் பெற்றுள்ளனர். இங்கு, பயிற்சி
நிறைவு செய்துள்ள அதிகாரிகள், நவீன தொழில் நுட்பங்களையும் அறிந்து கொள்ள
வேண்டும். நவீன ராணுவம் என்பது அறிவு சார்ந்ததாகவும், அறிவியல் மற்றும்
தகவல் தொழில் நுட்பத்துடன் கூடியதாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம்
சிறப்பான பாதுகாப்பு முறைகளைப் பெற முடியும்.உலக அமைதியையும்,
உறுதிப்பாட்டையும், வளர்ச்சியையும் பயங்கரவாதம் அச்சுறுத்துகிறது.
பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பலியாகியுள்ளது. எனவே, அதை உறுதியான
நடவடிக்கைகள் மூலம் வேரறுக்க வேண்டும்.

ராணுவ அதிகாரிகள் பணி என்பது ஒரு வேலை மட்டுமல்லாமல், தேச
பாதுகாப்பையும் கொண்டதாகும். இன்றைய சூழ்நிலை சவால்கள் நிறைந்ததாகவே
உள்ளது. அர்ப்பணிப்பு மனப்பாங்கும், அயராத உழைப்பும் கொண்டிருந்தால்
மட்டுமே இந்த சவால்களை சந்திக்க முடியும். அதற்கான பயிற்சிகளை இது போன்ற
நிறுவனங்கள் தொடர்ந்து அளிக்க வேண்டும்.இவ்வாறு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்
பேசினார்.

பயிற்சியின் போது, அனைத்து பிரிவுகளிலும் சிறப்பான முறையில் தேர்ச்சி
பெற்ற கேரளாவைச் சேர்ந்த பிரசாத் பிள்ளைக்கு, “வீரவாள்’ விருதையும்,
வெள்ளிப் பதக்கத்தையும், ஷிகா பதூரியாவிற்கு தங்கப் பதக்கத்தையும் ஜனாதிபதி
பிரதிபா பாட்டீல் வழங்கினார். நிகழ்ச்சியில், கவர்னர் சுர்ஜித் சிங்
பர்னாலா, இந்திய ராணுவ தளபதி தீபக் கபூர், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய
கமாண்டன்ட் பஜ்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

துள்ளிக் குதித்து மகிழ்ச்சி: ஒன்பது மாதம் பல்வேறு விதமான கடுமையான
பயிற்சிகளை நிறைவு செய்த ராணுவ வீரர்கள், நேற்று முதல் பயிற்சி முடித்து
ராணுவப் பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். பயிற்சியை வெற்றிகரமாக முடித்த
சந்தோஷத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து, துள்ளிக்
குதித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். பட்டாசுகள் வெடிக்க, மூவர்ண
பலூன்கள் விண்ணில் பறக்க, பெற்றோர்கள் புடை சூழ பயிற்சி நிறைவு செய்த ஆண்,
பெண் அதிகாரிகள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் பல நிமிடங்கள் மிதந்தனர்.
உணர்ச்சிப் பெருக்கில், பல பெற்றோர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
brightson
brightson
தோழர்
தோழர்

பதிவுகள் : 128
Points : 414
இணைந்தநாள் : 01/04/2011
வயது : 40
சொந்தஊர் : தமிழ்நாடு - இந்தியா

http://www.kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum