கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


பொக்கிஷங்கள் கணக்கெடுப்பு

Go down

பொக்கிஷங்கள்  கணக்கெடுப்பு Empty பொக்கிஷங்கள் கணக்கெடுப்பு

Post by brightson on Fri Sep 23, 2011 4:02 pm

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் உள்ள 5 ரகசிய நிலவறைகள் திறக்கப்பட்டது. அங்கிருந்து விலை மதிக்க முடியாத பழங்கால பொற்குவியல் பொக்கிஷங்கள் வெளியே எடுக்கப்பட்டன. இவற்றை கணக்கிடுவதற்கு தேசிய அருங்காட்சியக இயக்குனர் ஆனந்தபோஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது.

இக்குழுவினர் பொக்கிஷங்களின் கணக்கெடுப்பை தொடங்குவதற்கும், கடைசி பி அறையை திறப்பதற்கு முன் கோவிலில் மத்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கையை நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பரிசீலித்தனர். அதன்படி ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள 5 நிலவறைகளின் பொக்கிஷங்களை கணக்கெடுப்பு பணியை உடனே தொடங்க வேண்டும் என்றும், ஓராண்டுக்குள் முடித்து அவற்றை பாதுகாப்பாக வைத்த பின்பே கடைசி அறையான பி நிலவறையை திறப்பது குறித்து தீர்மானிக் கலாம் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து பி நிலவறை திறப்பது மேலும் கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மதிப்பீட்டு குழு தலைவர் ஆனந்தபோஸ் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு கூறிய படி ஓராண்டுக்குள் பொக்கிஷங்கள் கணக்கெடுப்பு பணியை முடிக்க தீர்மானித்து உள்ளோம். இதனால் உடனடியாக 5 நிலவறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பொற் குவியலின் கணக்கெடுப்பு பணியை தொடங்க உள்ளோம். கணக்கெடுப்பு பணியின் போது அதிநுட்ப நவீன காமிராக்களில் பதிவு செய்வதற்காக பிரபல தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு அறிக்கை தாக்கல் செய்து இருந்தோம். தற்போது மாநில போலீசாரின் பாதுகாப்பே போதும் என்று கூறி உள்ளதால் கேரள அரசிடம் இது குறித்து பேசி பாதுகாப்பை பலப்படுத்தவும் அறிவுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
brightson
brightson
தோழர்
தோழர்

பதிவுகள் : 128
Points : 414
இணைந்தநாள் : 01/04/2011
வயது : 35
சொந்தஊர் : தமிழ்நாடு - இந்தியா

http://www.kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum