அரசு பள்ளியில் மது பார், ஆபாச சி.டி.
கவிக்குயில் :: மக்கள் அரங்கம் :: அரசியல்
Page 1 of 1
அரசு பள்ளியில் மது பார், ஆபாச சி.டி.
அரசு பள்ளியில் ஒரு அறை மது பார் ஆகவும், ஆபாச டிவிடிக்கள் பார்க்கவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சோலையார் அணையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாவட்ட கலெக்டர் பங்கேற்கும் மனு நீதி முகாம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய, சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு தாசில்தார் சின்னப்பையன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மொய்தீன், முடீஸ் எஸ்.ஐ. மோகன்தாஸ் உள்ளிட்டோர் சென்றனர்.
பள்ளி கட்டிடத்தின் பக்கவாட்டில் பூட்டியிருந்த ஒரு அறை குறித்து விசாரித்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு அது தலைமையாசிரியர் அலுவலக அறையாக இருந்ததாகவும், தற்போது பொருள் வைப்பு அறையாக உள்ளதாகவும் தலைமையாசிரியர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
அதை திறந்து பார்த்தபோது, அங்குள்ள டேபிளில் மதுவுடன் கூடிய பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி டம்ளர்கள் இருந்தன. டிவி, டிவிடி, ஆபாச சிடிக்கள் மற்றும் 2 படுக்கைகள் இருந்தன. 10 மூட்டைகளில் ரேஷன் கோதுமை இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இவர்கள், பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் கஸ்தூரிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அந்த அறையில் சிலர் இரவு நேரங்களில் முறைகேடாக தங்கி, பார் ஆக பயன்படுத்தியதும், ரேஷன் கடை கோதுமையை சமூக விரோதிகள் இங்கு பதுக்கிவைத்து கடத்துவதற்கு வாட்ச்மேன் செல்வராஜ் உறுதுணையாக இருந்ததும் தெரிய வந்தது.
வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி ரேஷன் கோதுமையை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாட்ச்மேன் செல்வராஜை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. மேலும் பொருள் வைப்பு அறையை பார் ஆகவும், உல்லாசத்துக்கு பயன்படுத்தியவர்கள் யார், யார் என்பது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» மலேசியாவில் போலீஸ் சித்ரவதை - இந்தியர் மரணம்?
» தீவிரவாதிகளை ஊக்குவிப்பது யார்?
» உலகின் அதிசயம் தஞ்சை பெரிய கோயில்
» தமிழை உயிராக நேசிக்கிறேன்
» திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்
» ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!
» வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...
» தமிழா நீ ஒரு சகாப்தம்
» ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட
» வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண்
» பர்தா என்றால் என்ன?