தயவு செய்து படிக்க வேண்டாம்
Page 1 of 1
தயவு செய்து படிக்க வேண்டாம்
நீங்கள் இளகிய மனம் உடையவராகவோ அல்லது வீட்டில் தனியே அமர்ந்து படிப்பதாகவோ இருந்தால் தயவு செய்து இந்த கட்டுரையை படிக்க வேண்டாம்.
சில நாட்களுக்கு முன் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு என் வீடு இருக்கும் அண்ணா பல்கலைக்கழக பஸ்ஸ்டாப்பில் நான் இறங்கியபோது மணி நள்ளிரவு 12.
பஸ் ஸ்டாப்பிலிருந்து என் வீட்டிற்கு சுமார் அரை மைல் நடக்க வேண்டி இருந்தது. திகில் படத்தில் இருப்பது போல மிரட்டும் இரவில், வழி
யும் வியர்வையைத் துடைத்துக் கொண்டே, பயத்துடன் நடக்க ஆரம்பித்தேன். சிறிது தூரம் போனதும் ஒரு வயதான முதியவர் புத்தகங்களை விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பல நாள் தாடியுடனும் பெரிய சிவந்த விழிகளுடனும் பயங்கரத் தோற்றத்தில் இருந்த அவரைப் பார்த்ததும் பயம் மேலும் அதிகரித்தது.
பாட்டி சொன்ன பேய்க் கதைகளும், படித்துத் தெரிந்து கொண்ட பிசாசுகளும்நேரங்கெட்ட நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைத்தன. முதியவர் என்னைப் பார்க்கும் முன் எதிர் சந்தில் ஓடிவிடலாம் என நினைக்கையில், அந்த முதியவர் என்னை அழைத்தார்.
“ஏலே பேராண்டி, ஒரு புத்தகம் வாங்கிட்டுப் போலாம் வாடா! “
பயத்தை மறைத்துக் கொண்டு, அவர் வைத்திருக்கும் புத்தகங்களின் மேல் பார்வை பதித்தால் எல்லாம் அமானுஷ்ய கதைகளாய் இருந்தன.
அவற்றில் ஒன்று மட்டும் என் கவனத்தைக் கவர்ந்தது.
“இந்த புக்கோட விலை என்ன?” எனக் கேட்டேன்.
”இருநூத்தம்பது ரூபாய் பேராண்டி”
“என்ன? இருநூத்தம்பது ரூபாயா?” என நான் சொன்னதும், சிவந்த விழிகளை மேலும்சிவக்க வைத்து முறைத்தார். எப்படியாவது இவரைக் கடந்தால் போதுமென, கையில் இருந்த 200 ரூபாயைக் கொடுத்து விட்டு, விட்டால் போதுமென வீட்டிற்குக் கிளம்பினேன்.
என்னை மீண்டும் அழைத்த முதியவர், "என்னநடந்தாலும் புத்தகத்தோட கடைசிப் பக்கத்தை மட்டும் படிக்காதே! மீறிப் படித்தால் உன் உயிருக்கு நான் உத்தரவாதம் இல்லை" என கூறிச் சென்றார்.
வீட்டிற்கு வந்ததும் வாசலிலேயே காத்திருந்த அம்மாவிடம், "புதுசா யாராவது புத்தகம் விற்கிற தாத்தாவை யுனிவர்சிட்டி ரோட்ல பார்த்திருக்கிறீங்களா?" எனக் கேட்டேன்.
"நான் பார்க்கலை. ஆனா ஒவ்வொரு பெளர்ணமிக்கும் ஒரு தாத்தா தவறாம யுனிவர்சிட்டி ரோட்ல நடு ராத்திரியில புத்தகம் விற்கிறதா பக்கத்து வீட்டிலச் சொன்னாங்க. யுனிவர்சிட்டியில நடந்த ராகிங்ல இறந்து போன பையனோட ஆவின்னு சொல்லியும்கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் கேட்கிறே?"
"ஒண்ணுமில்லை. சும்மாதான் கேட்டேன்" என அம்மாவைச் சமாளித்தேன். முதியவரிடம் வாங்கிய நூலைப் படிக்க ஆரம்பித்தேன். மணி இரண்டை நெருங்கும் போது, கடைசிப் பக்கத்திற்கு வந்தேன். பக்கத்தைத் திருப்பிப் படிக்கலாமா வேண்டாமா என மனதிற்குள் ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தி பின் என்ன ஆனாலும்படிப்பது என முடிவு செய்தேன்.
கடைசிப் பக்கத்தில்... ....
Original price:-- Rs. 20/-
Promotion price:-- Rs. 10/-
சரி, சரி யாரும் என்னை அடிக்க வராதீங்க! பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்!!
-கவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Sun Jun 02, 2013 2:07 pm by brightson
» மலேசியாவில் போலீஸ் சித்ரவதை - இந்தியர் மரணம்?
Sun Jun 02, 2013 12:03 pm by brightson
» தீவிரவாதிகளை ஊக்குவிப்பது யார்?
Sun Jun 02, 2013 12:00 pm by brightson
» உலகின் அதிசயம் தஞ்சை பெரிய கோயில்
Thu Feb 14, 2013 11:22 pm by brightson
» தமிழை உயிராக நேசிக்கிறேன்
Thu Feb 14, 2013 11:16 pm by brightson
» திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்
Thu Feb 14, 2013 11:11 pm by brightson
» ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!
Thu Feb 14, 2013 10:47 pm by brightson
» வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...
Thu Feb 14, 2013 10:40 pm by brightson
» தமிழா நீ ஒரு சகாப்தம்
Tue Feb 12, 2013 10:42 pm by brightson
» ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட
Tue Dec 25, 2012 2:48 am by Admin
» வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண்
Sun Nov 25, 2012 5:20 pm by brightson
» பர்தா என்றால் என்ன?
Sun Nov 25, 2012 5:16 pm by brightson