கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...
Join the forum, it's quick and easy

கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


கவிக்குயில்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


பெண்ணியம்:

Go down

  பெண்ணியம்: Empty பெண்ணியம்:

Post by Admin Fri May 27, 2011 3:48 pm

பெண்ணியம்:

பெண்ணியத்தை நேரிடையாக அணுகும்போது அது ஏதோ பெண்களுக்கு மட்டுமே உரியது போலும் மறைமுகமாகவேணும் ஆண்களுக்கு ஆப்பு வைப்பது போலும் தோன்றும். ஆனால் பெண்ணியம் வெற்றி பெறாவிடில் ஆண் இனம் மொத்தமாய் பைத்தியம் பிடித்து சட்டையை கிழித்துக்கொண்டு கும்பலாய் ரோட்டில் அலைவது நிச்சயம்.

மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண் இனம் ஆணாதிக்கம் காரணமாய் உடல்,உள்ள பலமின்றி,பொருளாதார சுதந்திரம் இன்றி, மன உளைச்சல்களுடன், சமுதாயம் மீதான அதிருப்தியுடன் வாழ்வது என்பது சமுதாய நலன்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம்.

தனக்கு மறுக்கப்பட்டவற்றை பெண்ணினம் வேறு முறைகளில் பெற முனைந்து கொண்டே தான் இருக்கிறது . சில சந்தர்ப்பங்களில் வெற்றி பெற்றும் வருகிறது. உம்: தமிழகத்தில் ஜெயலலிதா, உ.பி.யில் மாயாவதி இதன் விளைவுகளை நாடு அனுபவித்தே தீர வேண்டும்.

இது நாட்டு வளங்களை எந்த அளவுக்கு விரயமாக்குகிறது என்பதை கிட்னிக்கு வேலை கொடுத்து சிந்தித்தாலே தெரியும். புரியும்.

தொடரும் ஆண் ஆதிக்கம் என்ற வார்த்தையை பார்க்கும்போது பெண்கள் என்னவோ ஆண் ஆதிக்கத்துக்கு எதிராய் பெரிய போராட்டமே செய்துவிட்டது போலும் அதையும் மீறி ஆண் ஆதிக்கம் தொடர்வது போலும் ஒரு ஃபீலிங் வருகிறது. இதனால் போட்டிக்கான தலைப்பே தவறு என்று கூறி இக்கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

பெண்ணியம்,ஆணியம் என்று பிரித்து பார்ப்பதே முட்டாள் தனம். ஆனால் என்ன செய்ய வேத காலம் முதலாக (ஒரு சில விதிவிலக்குகள் தவிர)பெண் அடிமையாகவே வாழ்ந்து பின் தங்கிப்போனாள்.

தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாது . இது பாஸ்கலின் தத்துவம். மனித மனம்,நீர் இரண்டுக்கும் சந்திரன் காரகத்வம் வகிப்பதாய் ஜோதிடவியல் கூறுகிறது. அவளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை அவள் எவ்வழியிலேனும் பெற்றிடத்தான் துடிப்பாள்.

அழகு,கவர்ச்சி,கண்ணீர் போன்ற ஆயுதங்களை அவள் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது சமுதாய மோரல் பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்ணியத்துக்கு காட்டப்படும் ஆதரவும் பெருமளவு குறைவதோடு பெண்ணியமே கேள்விக்குட்படுத்தப்பட்டுவிடுகிறது.

எனவே பெண்ணிய வாதிகள் தம் போராட்டத்தை தீவிரப்படுத்துவதோடு தமது வியூகத்தை மாற்றிகொண்டாக வேண்டிய நிலை இன்றுள்ளது. நாளிதுவரை பெண்ணிய வாதிகள் பெண்ணை ஆணாக மாற்றத்தான் போராடினார்கள். இதனால் பெண் இருபுறம் ஏற்றப்பட்ட மெழுகு வர்த்தியாகி தன் ஆயுளையும்,சுதந்திரத்தையும் இரட்டிப்பு வேகத்தில் இழந்து வருகிறாள். கிருக இம்சையோடு (Domestic Violense) ,புற உலகின் இம்சையையும் அவள் கூடுதலாக எதிர்கொள்ள வேண்டி வந்துவிட்டது. இவற்றையெல்லாம் இந்த பதிவில் தொட்டேனும் பார்க்காது விடுவதாய் இல்லை.

அவள் சம உரிமைகளுடன் வாழ்ந்தது மனித குலம் குகைகளிலும், வனங்களிலும் வசித்த காலத்தில் தான் என்பது என் அனுமானம். ஆணுக்கு சமமான உடல் வலிமையுடன்,வேட்டைத்திறமையுடன் இருந்திருப்பாள். அந்த வாழ்வில் மாதவிலக்கு எல்லாம் அவளை சொர்வுறச்செய்திருக்கவோ, ஓய்வை வேண்டவோ வைக்குமத்தனை நிலை கூட இருந்திருக்காது என்று நம்புகிறேன். பிரசவம் கூட அவளை பெரிதாய் பாதித்திருக்காது. தற்போதும் கூட பிரசவம் முடிந்த கையோடு அரிசி புடைக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மனித குலம் காடு விட்டு நதிக்கரையோரமாக கடலோரமாக பயணத்தை துவக்கிய போது கூட பெண்ணுரிமைக்கு பங்கமிருந்திருக்காது. ஸ்திரவாசம், ஸ்திர விவசாயம் என்று வளர்ந்த போதுதான் தான் திருத்திய காடு தன் ரத்தத்துக்கே என்ற சுய நலம் மனிதனில் ஸ்திரப்பட்ட போதுதான் பெண்ணை சுற்றி வேலி முளைத்திருக்க வேண்டும்.

அதுவரை செக்ஸ் என்பது கொழுப்பேறிய போது, அதிகப்படி சக்தியை வீசி எறியும் செயலாகவோ, அல்லது மழை,குளிரின் போது இதம் தரும் ஒரு செயலாக இருந்திருக்க வேண்டும். ஸ்திர வாசம் , மற்றும் வாரிசு குறித்த கவலை ஆணினத்தின் சிந்தனை போக்கை மாற்றிவிட்டது. அவள் இன உறுப்புக்கு பூட்டு போட முடியாத நிலையில் அவளையே பூட்டி வைக்க ஆரம்பித்தது. (சில பிரகிருதிகள் மேற்படி பூட்டுக்கே கூட முயற்சித்ததாக சரித்திர ஆதாரங்கள் உள்ளன)

இந்த ஸ்திர வாழ்க்கையில் தான் செக்ஸ் விஷயத்தில் தான் எந்த அளவுக்கு பலவீனன் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒரு முறைக்கு பின் மறுமுறைக்கு அவன் சற்று நேரமாவது காத்திருக்க வேண்டியது கட்டாயம். பெண்ணோ ஒரே இரவில் 23 முறைகள் வரை உச்சம் எய்தும் சக்தியை பெற்றிருக்கிறாள். (இது இப்போதைய கணக்கு. அந்த காலத்தில் இது கு.ப இரட்டிப்பாகவேணும் இருந்திருக்கலாம்.

இதையெல்லாம் ஆராய்ந்தறிய வன வாழ்வில் நேரமும் கிடையாது. அவசியமும் கிடையாது. (வாரிசுக்கான அவசியமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏற்பாடோ கிடையாது என்பதால்) . பெண்ணின் பலத்தை அறிந்த ஆண் நடு நடுங்கிப்போனான். அவளில் தாழ்வு மனப்பான்மையை விதைக்க தலைப்பட்டான். (இதற்கு மாதவிலக்கு ஒரு பெரும் வாய்ப்பானது) அவள் கால்களை மட்டுமல்ல மனதையும் கட்டிப்போட்டான்.

சிறுமியிடம் ஜிமிக்கி திருட வந்தவன் அவளுக்கு மிட்டாய் தருவது போல அவளது சுதந்திரத்தை பறித்துக் கொண்டு தாய் என்றும் சகோதிரி என்றும் பட்டங்கள் சூட்டினான். உழைப்பிலிருந்து அவளை விடுவித்து ஓய்வு கொடுத்தான். அந்த ஓய்வு பெண்ணை மேலும் பலவீனப்படுத்தியது. உடல் ரீதியான பலவீனம் அவளை மன ரீதியில் பெரிதும் பாதித்தது. பாதுகாப்பற்ற தன்மை அவளை ஒட்டுண்ணியாக்கியது. சதிகாரியாக்கியது.

பெண்ணுக்கு பால்யத்தில் தந்தையும், இளமையில் கணவனும், முதுமையில் மகனுமே பாதுகாப்பு என்று கூறப்பட்டது. அதனால் அவள் பால்யத்தில் தந்தையையும், இளமையில் கணவனையும், முதுமையில் மகனையும் இன்ஸ்பைர் செய்வதே பிழைப்பாய் வாழ வேண்டியதாயிற்று.

உண்டிச்சுருங்குதல் பெண்டிற்கழகு என்று கூறப்பட்டது. இந்த பழமொழி இந்த காலத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம். க்ரைண்டர்,மிக்ஸி, யுகம் இது. அந்த காலத்தில் அதுவும் கூட்டுக்குடும்ப யுகத்தில்,இயந்திரங்களின் துணையில்லாத காலத்தில், கு.க.அமலில் இல்லாத காலத்தில் ? யோசித்துபாருங்கள்.அடப்பாவிகளா !
போதிய போஷாக்கு இல்லாவிடில் உடல் உடலை உண்டு விடாதோ.

அவளை உடலாகவே பச்சையாக சொன்னால் வெறும் துளையாகவே பார்த்தது சமுதாயம்.அதை எவனேனும் உபயோகித்து விடக்கூடும் என்றும் சீல் உடைபட்டுவிட்ட பொருளை சந்தைப்படுத்த முடியாது என்றும் வேறு வார்த்தைகளில் கூறியது. அதை ஒரு பாதுகாப்பு குறைபாடாக காட்டி கற்பனை வளத்துடன் கற்பு என்ற நூதன அணிகலனை உருவாக்கி அதையே முழு முதல் தகுதியாக்கி அதை இழந்து விடுவாய் என்று கல்வியை மறுத்தது. வேலை வாய்ப்பை மறுத்தது. பொருளாதார சுதந்திரத்தை மறுத்தது. மீறி கேள்வி கேட்டால் நீ விலைமகளாக விரும்புகிறாயா என்று எதிர்கேள்வி எழுப்பியது.

ஒரு விலை மகள் விஷயத்திலேனும் அவளிடம் உறவாட வருபவனுக்கு சில நிபந்தனைகள் விதிக்க அவளுக்கு உரிமை இருந்தது .வந்தவன் இடம்,பொருள்,ஏவல் எல்லாம் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் திருமணமான குலமகளுக்கோ அந்த உரிமைகள் கூட கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஒரு சர்வீஸுக்க் ஒரு சர்வீஸ் ஃப்ரீ என்பது போல் சில கேஸ்களில் அவள் தன் கணவனின் தந்தை, அண்ணன் தம்பிமார் இச்சைகளுக்கும் இணங்க வேண்டியிருந்தது. (சமீபத்தில் கூட இது போன்ற வழக்கு விவரம் தமிழ் வார இதழ்களில் வெளியானதை கவனித்திருக்கலாம்)

பெண் என்பவள் ஒரு துளை, அத்துளையின் சகல உரிமைகளுக்கும் கணவனே பட்டாதாரன்.அவள் சரீர சுகம் தரும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் வந்த வேசி.இலவசமாகவே வாரிசை பெற்று தரும் வாடகைதாய் . சம்பளமில்லாத வேலைக்காரி. இவன் குழந்தைகளின் ஆயா. அதுகளின் கழிவை அகற்றும் தோட்டி. என்னங்கடா இது எங்கயாவது அடுக்குமா ? எந்த ஜீவ ராசியிலாவது இது போல் நடக்கிறதா ? ஏதோ சில உயிர் இனங்களில் ஒருவனுக்கு ஒருத்தி ஏற்பாடு இருக்கலாம். ஆனால் அது இயற்கையின் ஏற்பாடு. அங்கும் கூட அது பரஸ்பர அங்கீகாரத்தின் பேரில்தான் அமலாகிறது.

இன்றைய திருமணமான பெண்களுக்கு நீங்கள் விரும்பினால் உங்கள் கணவர்களை விவாகரத்து செய்துவிடலாம் .உங்களை இந்த சமுதாயத்தில் உள்ள ஆணினம் இழிவாய் நோக்காது. நோக்கினால் அவர்களுக்கு லுல்லா கட் செய்யப்படும். பெண்ணினமும் புறம்பேசாது. பேசினால் அவர்களின் நாக்கு கட் செய்யப்படும். உங்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு,சுய தொழிலுக்கான கடனுதவி அனைத்தும் 24 மணி நேரத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கட்டும். எந்த கணவனின் கீழும் ( நான் ஆதிக்கத்தை சொன்னேங்க ) பெண் என்பவளே இருக்கமாட்டாள் . வேணும்னா ஆண்கள் எல்லாரும் ஹோமோக்களா மாறியிருப்பாங்க.

நான் பெண்ணியம் என்ற கருத்துக்கு ஆதரவாக இத்தனை ஆவேசமாக கருத்துக்களை கொட்டினாலும் பெண்களுக்கான உரிமைகளை ஆண்களே முன் வந்து வழங்க வேண்டும் அ அரசு அதற்கான சட்டங்களை கொண்டு வரவேண்டும் என்று மட்டும் கூறமாட்டேன். ஏனெனில் ஆண்கள் மனமுவந்து வழங்குவதாயின் எப்போதோ வழங்கியிருக்க வேண்டும்.

//சொம்மா கிடைச்சா அதனோட மதிப்பு தெரியாம தாய்குலமே தாரைவார்த்தாலும் வார்க்கலாம் - நமக்கு கிடைச்ச சுதந்திரம் மாதிரி//

அரசின் சட்டங்கள் என்கிறீர்களா ? இருக்கும் சட்டங்கள் ஒழுங்காக அமலானாலே போதும். ஆனால் அவை அமலாகா.

இதற்கு என்ன காரணம் என்றால் ஆண் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவது அவள் குறித்த அச்சத்தால். அரசுகளை நடத்துவது ஆண்கள். சரி அரசியலதிகாரம் கிடைத்தால் போதாதோ உ.ம் 33 சதம் ஒதுக்கீடு. இதனை ஸ்தூலமாக பார்க்கும்போது பெண்ணின விடுதலைக்கே கொண்டு வரப்போவதாக தோன்றும். ஆனால் சற்றே அவதானித்துப்பார்த்தால் அய்யராத்து அழகுகள் இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு பாச்சா காட்டிவிட்டு கொல்லைப்புறவழியாக பாராளுமன்றங்களில் நுழையத்தான் வழிவகுக்கும்.

உண்மையான தலித் பெண்தான்:
நமது நாட்டில் உண்மையான தலித்தாக ஒடுக்கப்படுபவள் பெண் தான் . உயர் சாதிக்காரன் தலித்தை கொடுமைப்படுத்தினால் மேற்படி தலித் தன் மனைவியை கொடுமைப்படுத்துகிறான். சாதீய அமைப்பு தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட ஆண்களுக்கு கல்வியை மறுத்து வெறும் கூலிகளாக மாற்றினாலும் இது தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஓரளவு நன்மையை செய்ததென்றே கூறவேண்டும். ஆம் அவர்களுக்கு குலப்பெருமை இத்யாதி (?) இல்லாமையால் ,அவர் தம் கணவன் மாருக்கு வாரிசுகள் வந்து ஆள சொத்துக்கள் கிடையாதென்பதால், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி ஏற்பாடுகள் அந்த அளவுக்க் கடுமையாக அமலாகவில்லை. மேலும் நிலங்களில் பாடுபட மனித வளம் அபரிமிதமாக தேவைப்பட்டதால் அந்த பெண்கள் அந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை.

இந்த விஷயத்தில் மு.படுத்தப்பட்ட பெண்களின் நிலை மோசம். அவர்கள் வெறுமனே லேயர் கோழிகளாக தான் பாவிக்கப்பட்டனர்.ஆண்கள் தமது குலம் தந்த எதேச்சதிகாரத்தால் பிற வர்க,குல பெண்களை பெண்டாளும் முயற்சியிலும், ஊர் நிலங்களை கொள்ளையடிப்பதிலும் கருமமே கண்ணாயிருந்தனர். தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும், வளர்த்துக்கொள்ளவும் அரசனோ, இன்ன பிற அதிகார மையங்களோ கோரிய போது தமது வீட்டு லேயர் கோழிகளை ப்ரொவைட் செய்து வந்தனர். பெண்டிரோ உண்டி சுருங்கி, அடிமைத்தளையால் மனம் சுருங்கி கிடந்தனர். உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் தேவைகள் சேடிசமாகி தம் கணவரின் இதர மனைவியரையும்,ஆசை நாயகியரையும்,வேலைக்காரர்களையும், துன்புறுத்தி அதில் இன்பம்கண்டனர்.

தம்மை துளையாகவே கருதி தம்மை அடிமைத்தளையில் பிணைத்த ஆண்களை அதையே கருவியாக கொண்டு பழிவாங்கவும் செய்தனர். அல்லது கணவன் உடல் ஒடுங்கி கிடக்கையில் பிள்ளைகளை அவனுக்கு எதிராக திருப்பி திருப்தியடைந்தனர். மொத்தத்தில் மன நோயாளிகளாகவே இருந்தனர்.

அந்தப்புரத்து பெண்களின் நிலை வேறு விதம் செயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆணுறுப்பை ஒத்த பொருட்களால் அலிகள் இன்பம் தர (?) கைதி வாழ்வை வாழவேண்டியதாயிற்று. காலம் மாறியது. அன்னியர் படையெடுப்பின் போது ஆண்களின் நேரம் ,சக்தி அவர்களை எதிர்ப்பதில் செலவாகிக்கொண்டி ருக்க பெண் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால் அவர்களிலும் பெண்ணடிமைத்தனம் இருந்ததால் அவர்களின் ஆட்சியிலும் பெண்களின் நிலையில் பெரிதாய் மாற்றம் வரவில்லை. பஞ்சாங்கங்கள் மிலேச்சர் என்று இழிவாக குறிப்பிடும் கால் கழுவாத ஆங்கிலேயர் வருகைக்கு பின்புதான் பெண்ணின் நிலையில் மாற்றம் துவங்கியது.

பால்ய திருமண தடை, உடன் கட்டை ஏறுதலுக்கு தடை, பெண் கல்வி போன்ற அம்சங்கள் பெண்ணின் அடிமைத்தளைகளை ஓரளவு தளர்த்தவே செய்தது. சுதந்திர இந்தியாவில் இந்த அடிமைத்தளைகள் ஏறக்குறைய ஒரு பெண் திடமான சங்கல்பத்துடன் துணிந்தால் உஃப் என்று ஊதிவிடக்கூடிய ஒட்டடையாக மாறியது. ஆனால் சங்கல்பத்துக்கு தூண்ட வேண்டிய கல்வி பெண்ணினத்துக்கு கிடைத்ததா?, சங்கல்பம் கார்யரூபமடைய ஒத்துழைக்க வேண்டிய அமைப்புகள் ஒத்துழைக்கின்றனவா ? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும் .

பெண் தனது சுதந்திரத்தையோ , உயிர் அ மானத்தையோ காத்துக்கொள்ள தனியளாக அணுகும்போது அவளுக்கு உதவும் நிலையில் பிரதம பிரபுத்வ கார்யாலயங்களான காவல் நிலையங்கள் உள்ளனவா என்றால் இல்லை. அவளுக்கு அங்கு கிடைப்பது இலவச உபதேசங்களும், மெலிதான அச்சுறுத்தல்களும் தான். ஒரு வேளை அவள் இவற்றிற்கு மசியாது போனால் இருக்கவே இருக்கின்றன பொய்வழக்குகள் ,லாக்கப் டெத்ஸ். மகளிர் காவல் நிலையங்கள் உள்ளனவே என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். முதற்கண் அங்குள்ள பெண்கள் ஆண்களாக மாறிவிட்டிருப்பார்கள்.தப்பித்தவறி யாரேனும் மாறாதிருந்தாலும் மேல் சாவனிஸ்டு துறையில் ஒரு எல்லைக்கு மேல் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது.

கோர்ட்டுகள் பற்றி சொல்லவே வேண்டாம். இருக்கும் கடுப்பில் எதையாவது எழுதப்போய் நீதிமன்ற அவமதிப்பாகிவிடப்போகிறது. சுருக்கமாக சொன்னால் எந்த அரசுமே, அந்த அமைப்புமே பெண்ணின் உரிமையை , வாழ்வை , கு.ப. உயிர் வாழ்வை கூட உறுதி செய்வதாய் இல்லை.

Half knowledge is too dangerous என்பது போல் பெண்ணுக்கு கிடைத்துள்ள அரை குறை சுதந்திரம் பெண்ணின் வாழ்வை குளிக்கப்போய் சேறு பூசிக்கொண்ட கதையாக்கி விட்டது.

கல்வி பெற கல்விச்சாலைக்கு போனால் அங்கு அவளை சக மாணவர்கள் மட்டுமே அல்லாது , அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய ஆசிரியர்கள் மற்றும்
நி ர்வாகமே அவளை குதறிப்போடுகின்றன. ஒரு முறை அம்பேத்கர் பவனில் சுய உதவிக்குழு பெண்களுக்கான ஒரு அரசு நிகழ்ச்சி நடந்தத். நாற்காலிகள் காலியாய் கிடக்க ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகர் தான் நடத்தும் நர்சிங் கல்லூரி பெண்களை யூனிஃபார்மிலேயே வரவழைத்து உட்கார வைத்த் ஹாலை நிரப்பினார் என்றால் பாருங்கள்.

அவள் வந்ததோ கல்வியை பெற. கல்வி மூலம் வேலை வாய்ப்பை பெற்று பொருளாதார சுதந்திரத்தை பெற. ஆனால் அங்கு அவள் நிலை என்ன ? பள்ளி நிர்வாகி சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும்போது அரசு நிகழ்ச்சியில் காலி நாற்காலிகளை நிரப்பவேண்டும்

கல்வி பயில வரும் பெண்ணுக்கு அக்னிபரீட்சையாக இருப்பது பிராக்டிக்கல் மார்க்.
தொந்தி சரிந்து, தலை முடி இழந்து, சோடா புட்டி கண்ணாடி போட்டாலன்றி பகலில் பசு மாடு தெரியாத லெக்சரனுக்கு இவள் கேவலம் இரண்டு சதை கோளமாக உபயோகப்பட வேண்டும். அல்லது துளையாக மாற வேண்டும். இல்லாவிட்டால் ப்ராக்டிக்கல்ஸ் கோவிந்தா.. இந்த அரசுக்கு உண்மையிலேயே பெண்ணிய நோக்கிருந்தால் முதலில் இந்த ப்ராக்டிக்கல் மார்க் என்ற சமாச்சாரத்தையே தூக்கி எறிய வேண்டும்.

முன்னர் வீடுகளில் மட்டும் நரகத்தை அனுபவித்த பெண்ணுக்கு அலுவலகமும்,பணியிடமும் கூடுதல் நரகமாயின. முன்னர் தந்தை/கணவனுக்கு அஞ்சி பரபரத்த காலம் போய் அலுவலகத்தில் முதலாளி,மேலதிகாரி,சூப்பர்வைசர் என்று கண்ட நாய்கள் முன்னும் நாயாய் வாலை குழைக்க வேண்டியதாயிற்று. இதற்காக வீட்டிலான கடமைகள் ஏதேனும் குறைந்ததா என்றால் இல்லை. மேலும் சின்ன சின்ன விஷயத்துக்கும் "ஹ்ம்..மகாராணி நாலு காசு சம்பாதிக்கிறால்ல இனி இதெல்லாம் செய்ய உடம்பு வளையுமா? " என்ற கமெண்டுகள். வீட்டிலிருந்து பணியிடம் செல்கையில் பயண போக்குவரத்தில் படும் இம்சைகள். (சொந்த வாகனமே ஆனாலும் அதற்கான தவணையை பெண்தான் தன் வருமானத்தில் இருந்து கட்ட வேண்டியுள்ளது. சொந்த வாகனத்தால் போக்க்வரத்த் தொடர்பான சில்லறை இம்சைகள் கட்டுப்படுத்தப்பட்டாலும் விபத்து என்ற கத்தி அவள் தலை மீது தொங்கிக்கொண்டேதான் இருக்கிறது.

தப்பித்தவறி நியாயமான வழிகளிலோ /அநியாயமான வழியிலேயோ விடுதலை பெற்று விட்ட பெண் ஆணாக மாறிவிடுகிறாள்.(சிலர் பேச்சு, நடை ,உடை பாவனைகளில் மட்டுமல்லாது ,பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாது ( புகைத்தல், மது அருந்துதல்) உடலியல் ரீதியாகவும்மாறிவிடுவதாக கேள்வி. ஆம் . அவள் முன்னர் ஆண்கள் உலகத்தில் தான் சந்தித்த அவமானங்களையெல்லாம் நினைவு கூர்ந்து ஆண்களை பெண்களாய் நடத்த ஆணாகவே மாறிவிடுகிறாள். அவளால் விடுதலை பெற துடிக்கும் பெண்களுக்கு எந்த வழிகாட்டுதலும்.மோரல் சப்போர்ட்டும், உதவியும் கிட்டாமலே போய் விடுகிறது.

மேலும் ஒரு சோகம் என்னவென்றால் அவள் என்னதான் தன் அடிமைத்தளைகளை தகர்த்தெறிந்து சமுதாயம் தன்னை புதைத்து எழுப்பிய சமாதியை பெயர்த்து நிமிர்ந்தாலும் அவளின் சாதனை அங்கீகரிக்கப்படுவதில்லை. அவள் முன் புழுவாய் நெளிந்து காரியம் சாதிக்கும் ஆண் கூட சற்றும் தயங்காது அவள் கற்பின் மேலோ, அவள் நடத்தையின் மேலோ ,கல்லெறிகிறான்.

வாரிசு முறைப்படி அரசியல் அதிகாரம் , நிர்வாக அதிகாரம், பொருளாதார பலம் பெறும் பெண்ணை சுற்றிலும் கூட கண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர் இருக்கிறது. அடிமை வேலியை தாண்டிச்செல்ல துடிக்கும் பெண்களை மீண்டும் பட்டியில் கொண்டுவந்து அடைக்க கும்கி யானைகளாய் பெண்களே உபயோகிக்கப்படுகிறார்கள்

ஆக இந்த கட்டுரை ஆன கல்யாணத்துக்கு மேளம் போல் அமைந்து பெண் எப்படி அடிமைப்பட்டாள், எப்படி அடிமையாய் தொடர்கிறாள் என்பதை இதுவரை விவரித்தது. சரி பெண்ணியம் வெற்றி பெற, அதன் மூலம் மனித குல மாண்பை காத்து நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்த அரசு,சமூகம், பெண்கள்,ஆண்கள் ,பெண்ணிய வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். மாறியுள்ள உலக பொருளாதார நிலை, மந்தத்தன்மை , உலகமயமாக்கல், தனியார் மயம், க்ளோபலைசேஷன், தாராளமயம் ஆகியன ஆணை பலவீனனாக்கியுள்ளது. ஜாப் செக்யூரிட்டி என்பது இனி கனவுதான். எனவே ஆண் தன் சர்வைவலுக்கு அதிக நேரம்,சக்தி செலவழிக்கவேண்டியுள்ள இந்த நிலை பெண்ணிய வெற்றிக்கு அருமையான சந்தர்ப்பமாகும்.

இந்த நேரத்தில் நான் கீழே தரும் அம்சங்களில் பாதியேனும் சாத்தியமானால் பெண்ணியம் வெல்வது உறுதி. அதன் மூலம் மனித குலம் மாண்புறுவதும் உறுதி. (இல்லாட்டி எதிர்கால புதை பொருள் ஆராய்ச்சிகாரங்க காறித்துப்புவாங்கப்பா !)

1.அனைத்து எல்லைகள்,பிரிவுகளுக்கு(பிரிவினைகள்) அப்பாற்பட்டு பெண்கள் ஒன்று திரள வேண்டும்.

2.முதற்கண் பெண்ணிய நோக்குள்ள அமைப்புகள் ஒன்று திரள வேண்டும். பெண்களை ஒருங்கிணைக்க செயல்படவேண்டும்.

3.கேட்க நாதியில்லை என்று தான் பெண்கள் தம் தளைகளை அமைதியுடன் ஏற்று வாழ்கின்றனரே தவிர அடிமைத்தனத்தை விரும்பி அல்ல. எனவே பெண்ணுக்கெதிரான குற்றங்களை /உரிமை மறுப்புகளை பாகுபாடுகளை உள்ளூர் காவல் நிலையம் முதல் ஐ.நா சபை வரை எடுத்துச்செல்ல வேண்டும்

4. நாடு தழுவிய இந்த அமைப்பில் அரசியல் பின்னணி, சினிமா , தொலைக்காட்சி பின்னணி கொண்ட எந்த பெண்ணையும் சேர்க்க கூடாது. (காரணம் : பெண்ணடிமை கோலோச்சுவது இந்த துறைகளில் தான். சில கட்சிகளின் மகளிர் அணியின் முக்கிய வேலையே தலைவர்களின் சதைப்பசிக்கு ஏற்பாடு செய்வதுதான் என்று கேள்வி.

5.இந்த அமைப்புக்கென்று ஊருக்கு நூறு பேராவது இருக்குமாறு மோட்டிவேட் செய்யவேண்டும் இவர்கள் ஒன்றும் ஜீன்ஸ், சட்டை பார்ட்டிகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பொருளாதார சுதந்திரம் பெற்று சக பெண்களின் சுதந்திரத்துக்காக தமது ஓய்வு நேரங்களை செலவழிக்கும் நிலையில் இருந்தால் போதுமானது.பேனா பிடித்து ஒரு மனு எழுதவும், மவுஸ் பிடித்து ஒரு மெயில் அனுப்பவும் தெரிந்திருந்தாலே போதுமானது

6.சொந்த வெப்சைட் + சொந்த பத்திரிக்கை . இதில் கோலங்கள், எந்த சாமிக்கு எந்த நாள் விசேஷம் மாதிரி சமாச்சாரங்கள் வெளியாக கூடாது. முக்கியமாய் ராசிபலன்.

7. பெண்களுக்கான அரசியல் ஒதுக்கீடு அமலாக தடையாக உள்ளது அதில் உள் ஒதுக்கீட்டுக்கு (சாதிவாரி) ஆளும் கட்சி தரப்பில் மறுப்பு இருப்பது தான்.இது குறித்த விழிப்புணர்ச்சியை ஊட்டி உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவு திரட்ட வேண்டும்

8.எந்த பெண்ணுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அவள் வேசியாகவே இருந்தாலும் சரி அவளுக்கு இந்த அமைப்பு துணை நின்று அவள் உரிமைகளை காத்துக்கொள்ள உதவ வேண்டும்

9.பெண்ணை கருவிலிருந்து -காடு வரை காப்பாற்றும் பொறுப்பை அந்த அமைப்பு முன்னெடுத்து செல்லவேண்டும்.

10.திருமணத்துக்கு ஒரு ஆல்ட்டர்னேட்டிவ் பிரபலமடையவேண்டும். ( லிவிங் டு கெதர் மாதிரி)

11.விவாகரத்து சட்டங்கள் எளிமைப்படுத்தவேண்டும். அதிகபட்சம் 3 தினங்களில் விவாகரத்து வழங்கப்படவேண்டும்.

12.டைவோர்சிகளின் குழந்தைகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் அரசே தத்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

13.மொத பாயிண்டா சொல்லியிருக்கலாம்.. அடக்கி வாசிச்சு இங்கன சொல்றேன். ஆண்,பெண் பாலியல் தொழிலாளிகளுக்கு லைசென்ஸ் வழங்கப்படவேண்டும்.

14.இன்றைய பெண்களுக்கான பத்திரிக்கைகள்,சீரியல்கள் யாவுக்கும் தடை

கரு முதல் காடுவரை காப்புன்னு குறள் மாதிரி சொல்லிட்டன். இதை விவரிக்கனும்னா இந்த தொடர் மேலும் நீளும். எனவே அம்பே..............ல்:

Admin

பதிவுகள் : 15
Points : 46
இணைந்தநாள் : 29/11/2010

https://kavikuyil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum