கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...




Join the forum, it's quick and easy

கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


கவிக்குயில்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


விளங்காத வங்கிகள்

Go down

விளங்காத வங்கிகள் Empty விளங்காத வங்கிகள்

Post by Admin Fri May 27, 2011 3:54 pm

வங்கி கணக்கு ஒன்று தொடங்கஸ்டேட் வங்கி சென்று விண்ணப்பம் வாங்கி வரலாமென சென்றோம்

சரியான கூட்டம். புது கணக்கு தொடங்க வேண்டுமென சொல்ல வேறொரு கவுண்டருக்கு வழிகாட்டப்பட அந்த கவுண்டருக்கு சென்றால் அவர் இன்றைக்கு முடியாது என்றார் படிவம் தாங்க என்றால் செவ்வாய்கிழமை வாங்க என பதில் அளித்து விட்டு அவர் வேலையை தொடர்ந்தார்.

ஏன்?சனிக்கிழமை வங்கி கணக்கு தொடங்கக்கூடாதா என தெரியவில்லை. மற்ற அலுவலக வேலைநாட்களில் நம்மால் செல்ல முடியாது என சென்றால்” இப்படி “.

சரி தாம்பரத்தில் வேண்டாம். பெருங்களத்தூரில் உள்ள மற்ற வங்கி கிளையில் கணக்கு தொடங்கலாம் என முடிவு செய்தோம். வெள்ளிக்கிழமை அலுவலக செல்லும் அவசரத்தில் இந்தியன் வங்கியில் கணக்கு தொடங்க ஒரு படிவமும், இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ஒரு படிவமும் வாங்கினேன். இந்தியன் வங்கியில் என் மகளுக்கும் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் என் மனைவிக்கு சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என முடிவு செய்தோம. அடுத்த நாள் சனிக்கிழமை வீட்டில் வைத்து நிரப்பி விட்டு அறிமுகபடுத்துபவர் கையொப்பம் கணக்கு எண் எல்லா பெற்று முகவரி சான்றாக குடும்ப அட்டை யின் நகல் எடுத்து கொண்டு வங்கிக்கு சென்றோம.

நானும் என் மகளும் இந்தியன் வங்கிக்கு செல்வது எனவும் என் மனைவியை இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்று படிவம் யாரிடம் கொடுக்க வேண்டு மென முடிவு செய்து தெரிவிதது அனுப்பினேன். நாங்க இந்தியன் வங்கிக்கு சென்றால் மேலாளர் சரி பார்த்த பின் தான் கணக்கு தொடங்க வியலும் என விண்ணப்பம் அளித்த பெண் சொல்ல நாங்க மேலாளர் அறையில் வரிசையில் நின்றோம். எங்களுக்கு முன்னால் சென்றவரிடம் மேலாளர் அசல் குடும்ப அட்டையினை கேட்க இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் எங்களுக்காக காத்திருக்கும் என் மனைவிக்கு குடும்ப அட்டையின் அசலினை கொண்டு வரும்படி கைபேசியில் அழைக்க நினைப்பதற்குள் அவளிடமிருந்து அழைப்பு வர என்னவென விசாரிக்க என் மனைவி நீங்க சொன்ன அலுவலர் விண்ணப்ப படிவத்தை கூட வாங்க மறுக்கிறார். இன்றைக்கு முடியாது திங்கட்கிழமை வாங்க என நாயை விரட்டுவது போல் விரட்டு கிறார் என சொல்ல சரி நீ இந்தியன் வங்கிக்கு வா என நான் பதில் அளித்து விட்டேன்.

எங்கள் முறை வர , மேலாளரிம் சென்றோம். அவர் படிவத்தை வாங்கி பார்த்து என்மகள் கல்லூரியை பற்றியும் ,கேம்பஸ் வேலைவாய்ப்பு ஆகியவற்றை விசாரித்தார் இடையில் என்னை பற்றி விசாரிக்க நான் என் பணியை சொன்னவுடன் சார் முதலில் நீங்க வங்கியில் கணக்கு தொடங்குங்க என படிவம் ஒன்றை கொண்டு வர சொல்லி கையில் திணிக்காத குறையாக கொடுத்தார். மற்றவற்றை பேசிய படியே கொண்டே படிவத்தில் விடுபட்டு போனவைகளை நிரப்ப சொல்லி கடைசியில் குடும்பஅட்டையை அசலுடன் ஒப்பு பார்த்துவிட்டு இது மட்டும் போதாது . இன்னொரு நிழற்பட சான்று வேண்டுமென சொல்ல, வீட்டிற்கு சென்று அதனை எடுத்து வந்தேன்.. அதற்குள் 12 மணி ஆகிவிட திங்கட்கிழமை பணத்தை கட்டி கணக்கு புத்தகத்தை வாங்கி கொள்ளுங்கள் என சொன்னார்.

இடர்பாடுகள்

1. வங்கி படிவம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இருக்கிறது. படித்தவர்களால் கூட அப்படிவத்தை நிரப்ப விழி பிதுங்கி விடுகிறது. விண்ணப்ப படிவம் தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும். படித்தவர்கள் விழுக்காடு குறைவாக உள்ள நாட்டில் அதும் ஆங்கில அறிவு சுமாராக உள்ள நாட்டில் அந்தந்த மாநில தாய்மொழியில் படிவம் இருக்க வேண்டும் என இத்தனை ஆண்டுகள் கடந்தும் கூட ரிசர்வ வங்கிக்கு தெரியாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் நீதி அற்ற ஓன்று.

2. சனிக்கிழமை வங்கி கணக்கு தொடங்க கூடாதா . எலலா நாளும் தொடங்காலம் தானே. பின் ஏன் ஸ்டேட் வங்கி, தாம்பரம் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி , பெருங்களத்தூர் மறுக்கின்றன. ஒன்று அதிகமான வேலைச்சுமை பணியாளர் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். இருந்தாலும் வாடிக்கையாளர்களை கோபமாக விரட்டுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. தனியார் வங்கிகளுக்கு நான் சென்று இல்லை. அங்கு எப்படியோ. ஆனால் அங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் சில கஷ்டங்களை தெரிவித்தார்கள்.

3.தற்போது வேலைதேடி பிற மாவட்டங்கிளிலிருந்து இங்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் கணக்கு தொடங்க என்ன முகவரி சான்று அளிக்கவியலும் அவர்கள் கணக்கு தொடங்க வழிவகை செய்யப்பட வேண்டும்

4. பாமரார்கள் வங்கியில் நுழையவே பயப்படுவார்கள். நுழைந்த பின் இப்படி விரட்டினால் பின் அவர்கள் வங்கியில் எப்படி கணக்கு தொடங்க வருவார்கள்.

5.மக்களின் வரிபணத்தில் தான் வங்கி ஊழியர்கள் சம்பளம் பெறுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு வேண்டும் . பணக்காரர்களையும் படித்தவர்களையும் மட்டும் உச்சி முகர்ந்து முகமன் அளித்து வரவேற்கும் இவர்கள் அழுக்கான ஆடையுடன் வரும் இந்திய குடிமக்களின் சேமிப்பு நாட்டிற்கு பயன் படாமல் அரிசி பாணையில் முடக்க காரணமாகி விடக்கூடாது.

6. திரும்ப செலுத்தும் சக்தியை கணக்கிட்டு தான் கல்வி கடன் கொடுக்கும் போக்கு தற்போது உள்ளது. ஒரு வங்கியை அணுகினால் மற்ற வங்கியை அணுக சொல்லுவது அநியாயம்.

7. கொடுமை என்னவென்றார் அடித்தட்டில் இருந்து வங்கியில் பணியாற்றும் நண்பர்கள் கூட தங்களை சார்ந்தவர்களை சரியாக மதிப்பதில்லை.

திருந்துவார்களா. திருத்தப்படுவார்களர் காலம் பதில் சொல்லும்

Admin

பதிவுகள் : 15
Points : 46
இணைந்தநாள் : 29/11/2010

https://kavikuyil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum