கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...




Join the forum, it's quick and easy

கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


கவிக்குயில்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


பர்தா என்றால் என்ன?

Go down

பர்தா என்றால் என்ன? Empty பர்தா என்றால் என்ன?

Post by brightson Sun Nov 25, 2012 5:16 pm

சகோதரி சுமஜ்லா (கல்லூரியில் பிற மத சகோதரியுடன் நடந்த உரையாடல் )



பர்தா என்றால் என்ன?



பர்தா என்பது உடையல்ல...அது உடைக்கு மேல் அணியும் ஒரு அங்கி தான், அதைக் கழட்டினால் உள்ளே உடை இருக்கும்!!!


அழகாக உடை உடுத்தி, நகையெல்லாம் அணிந்து, பிறகு அதை பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்களே?!


நாங்கள் திருமணம் போன்ற விஷேசங்களில், ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு
தனி இடம் என்று ஒதுக்கி இருப்போம். இருவரும் கலப்பதில்லை. ஆக, நாங்கள்
வெளியே செல்லும் போது பர்தா அணிந்து சென்றாலும், திருமண மண்டபத்தில்
பெண்கள் பகுதிக்கு சென்றதும் அதை கழட்டி பையில் வைத்து விடுவோம். பிறகு
திரும்பும் போது, மீண்டும் அணிவோம். உறவுகளின் இல்லங்களுக்கு செல்லும் போது
இதே போலத்தான்.


பர்தா அணியச் சொல்லி கட்டாயப்படுத்துவது யார்?


எங்கள் பெண்களிடம் ஏன் என்னிடமும் கணவர் உட்பட எந்த ஒரு ஆணும்
கட்டாயப்படுத்தியதில்லை. நானே விரும்பித் தான் அதை அணிகிறேன். அதன்
சவுகரியங்களை உணர்ந்த எந்த ஒரு பெண்ணும், பர்தா இல்லாமல் வெளியே செல்வதை
விரும்புவதில்லை.


பர்தா ஏன் அணிகிறோம்?



எங்களுடைய அழகும் வனப்பும் கணவருக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறோம்.
இது ஒரு வித சுயநலம் போலத்தான் தெரியும். ஆயினும், எங்கள் வளர்ப்பு முறை
அப்படி! ஆக, வெளி ஆண்கள் யாரும் எங்கள் உடலின் தோற்றத்தைப் பார்ப்பது
எங்களுக்கு விருப்பமில்லை! அதற்காகத்தான் பர்தா அணிகிறோம்.


ஆண்கள் மட்டும் ஏன் பர்தா அணிவதில்லை?


நிச்சயமாக எங்கள் மதத்தில் ஆண்களுக்கும் பர்தா இருக்கிறது. ஆனால் அது வேறு
விதம். ஆணும் பெண்ணும் உடல் தோற்றத்தில் வேறு வேறு மாதிரி இருக்கும் போது,
எப்படி இருவருக்கும் ஒரே மாதிரி பர்தா அணிய முடியும்?



ஆண்களுக்கு தாடியும் நீளமான அங்கியும் தொப்புள் முதல் முட்டுக்கால் வரை
மறைப்பதும் அவர்களுடைய பர்தா போலத்தான். அதோடு, பெண்களைப் பார்த்தால்,
தம்முடைய பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும்படி அவர்களுக்கு
வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஏன் ஒரு சில முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லை?


அதற்குக் காரணம், அவர்களின் வளர்ப்பு தான். நற்குடியில் பிறந்து, இஸ்லாமிய
பாரம்பரியப்படி வளர்க்கப்படும் அனைவரும் நிச்சயமாக பர்தாவை
விரும்புவார்கள். பொதுவாக ஒரு குடும்பத்தில் பெண் எடுக்கும் போது,
அக்குடும்பப் பெண்கள் பர்தா அணிபவராக இருந்தால்,விரும்பி பெண்
எடுப்பார்கள்.


பர்தா அணிவது கஷ்டமாக இல்லையா?



உடை அணிவதை நாம் கஷ்டமாக நினைப்பதில்லையே! நாம் நம் கைகளை ஓரளவுக்கும்,
உடலின் சில பாகங்களையும், உடையினால மறைத்துக்கொள்கிறோம். கையின்
பெரும்பகுதியும், கழுத்தும் முதுகும் இடுப்பும் தெரியும்படியாக சேலை
கட்டுகிறோம்.


இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டும், இன்னின்ன
இடத்தை மறைக்க வேண்டியதில்லை என்று தீர்மானித்தது யார்? முதன்முறையாக சேலை
உடுத்தும் பெண், இடுப்பு வெளியே தெரியும் போது, சற்று சங்கோஷமடைவாளல்லவா?
அது போலத்தான், மீதியுள்ள பாகங்களான கழுத்து, கை முதுகு ஆகியவை வெளியே
தெரியும் போது, நாங்கள் அவமானப்படுகிறோம். ஆக, பர்தா அணியாமல் இருந்தால்
தான் எங்களுக்கு கஷ்டம்.


காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளாமல் ஏன் இன்னும் பர்தா அணிகிறீர்கள்?


பர்தா அணிவதால், எம்மினப் பெண்களின் வளர்ச்சி தடைபடுவதில்லை. மாறாக,
படிக்கும் காலத்தில் காதல்வலையில் வீழ்ந்து தம்மை இழந்துவிடாமல், நேரிய
வழியில் செல்வதற்கு இது ஏதுவாக இருக்கிறது. பர்தா அணிந்தாலும், நாங்கள்
விரும்பியதைப் படிக்கிறோம். விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து
முன்னேறுகிறோம். அதற்கு நானே உதாரணம்.

இதைக் கேட்டதும் பிறமத சகோதரி மெய் சிலிர்த்து போய் விடுகிறார்
brightson
brightson
தோழர்
தோழர்

பதிவுகள் : 128
Points : 414
இணைந்தநாள் : 01/04/2011
வயது : 39
சொந்தஊர் : தமிழ்நாடு - இந்தியா

http://www.kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum